மேலும் செய்திகள்
சிறார் திரைப்பட போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு
25-Feb-2025
உடுமலை ; கோட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்துவதற்கு கலைத்திருவிழா போட்டிகள், பள்ளி அளவில் துவங்கி, மாநிலம் வரை நடத்தப்படுகிறது. இதில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, திருப்பூர் மாவட்ட கல்வித்துறையின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருப்பூர் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நகைச்சுவை வழங்குதல் போட்டியில், கோட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி மதிவதனா, முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு, மாவட்ட கல்வித்துறையின் சார்பில் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பாராட்டு தெரிவித்தனர்.
25-Feb-2025