மேலும் செய்திகள்
மண்ணியல் விஞ்ஞானிகள் கருத்தரங்கு
18-Feb-2025
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்டது செல்லப்பபுரம். இதன், 4வதுவீதியில் கடந்த வாரம் ஒரு தனி நபர் தன் இடத்தில் ஆழ் குழாய் கிணறு அமைத்தார். இந்தப் பணியின் போது சேகரமான மண் குவியல் குவியலாக அவரது இடத்துக்கு முன், பொது வழித்தடத்தில் கொட்டப்பட்டிருந்தது.ஒரு வாரமாகியும் அந்த மண் குவியல் அகற்றப்படவில்லை. மிகவும் குறுகலான அந்த ரோட்டில் பாதி வரை இந்த மண் குவியல் கிடந்த நிலையில், டூவீலரில் செல்வோர் சறுக்கி விழுந்து காயமடைந்தனர். அப்பகுதியினர் பலமுறை வீட்டு உரிமையாளரிடம் முறையிட்டும் மண் அகற்றவில்லை. கட்டட பணிகள் துவங்கும் போது மண் தேவைப்படும் என்பதால், பின்னர் தான் மண் எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து அப்பகுதியினர் மாநகராட்சி குறை கேட்பு பிரிவுக்கும், கலெக்டர் அலுவலகத்துக்கும் புகார் தெரிவித்தனர். நேற்று காலை அப்பகுதிக்கு சென்ற துாய்மைப் பணியாளர்கள் ரோட்டில் குவிந்து கிடந்த மண் குவியலை அகற்றி அருகேயுள்ள அந்த நபரின் காலியிடத்தில் கொண்டு சென்று சேர்த்தனர். இந்த செயல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
18-Feb-2025