உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையில் சுற்றி திரியும் மாடுகள்

சாலையில் சுற்றி திரியும் மாடுகள்

திருப்பூர்: திருப்பூர் குமரன் ரோடு, முனிசிபல் ஆபீஸ் வீதி, பழைய மார்க்கெட் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, யூனியன் மில் ரோடு, வளம் ரோடு, மின் மயான ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளில் ஏராளமான மாடுகள் எந்த கட்டுப்பாடும் இன்றி, சுதந்திரமாக சுற்றி வருகின்றன. இந்த மாடுகள் வாகனங்கள் மீதோ, பாதசாரிகள் மீதோ திடீரென பாய்ந்து தாக்கும் அபாயம் உள்ளது. பெண்கள், குழந்தைகள் இவற்றைக் கண்டு அச்சப்பட்டு ஒதுங்கி நின்று கொள்ளும் நிலை உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;இது போல் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு உள்ளது. திருப்பூர் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நகரப்பகுதியில் பெரும்பாலும் மாடுகளை இஷ்டம் போல் சுற்றித் திரிய விட்டு விடுகின்றனர்.பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் ெதரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை