உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் முன் காலணி கடை பக்தர்கள் கடும் கண்டனம்

கோவில் முன் காலணி கடை பக்தர்கள் கடும் கண்டனம்

பல்லடம்:பல்லடத்தில், கோவில் நுழைவாயிலில் மாற்று மதத்தினர் காலணி கடை நடத்த அனுமதி வழங்கியது தொடர்பாக, அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இக்கோவில் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. திருப்பணி மேற்கொள்ள பக்தர்கள் மேற்கொண்ட முயற்சிகளிலும் இடையூறுகள் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று பக்தர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். கூட்டம் குறித்து பக்தர்கள் கூறியதாவது:மாற்று மதத்தினர் காலணி கடை நடத்த அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது. கடை உரிமையாளர்கள் தங்கள் சொந்த செலவில் கடைகளை கட்டி, தாங்களே அதை வைத்துக் கொள்வதாக தீர்மானித்துள்ளது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.எனவே, கோவில் கமிட்டி சார்பில் கடைகள் கட்டப்படுவதுடன், விதிமுறை மீறி செயல்படும் காலணி கடையை அனுமதிக்க கூடாது. அறநிலையத்துறையின் மோசமான செயல்பாடுகளால் கோவில் திருப்பணி நீண்ட காலமாக தடைபட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி