உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தி.மு.க., - அ.தி.மு.க., செல்வாக்கு தனி தொகுதிகளில் கடும் சரிவு

தி.மு.க., - அ.தி.மு.க., செல்வாக்கு தனி தொகுதிகளில் கடும் சரிவு

திருப்பூர்;இந்த முறை, லோக்சபா தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தனி தொகுதிகளில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கான ஓட்டு கணிசமாக குறைந்திருக்கிறது.

அவிநாசியில் பலத்த அடி

திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி தனி தொகுதியாக உள்ளது. இம்முறை (2024) லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு, 85,129 ஓட்டு; அ.தி.மு.க.,வுக்கு, 54,543 ஓட்டு கிடைத்தது. அதே நேரம், பா.ஜ.,வுக்கு, 48,206 ஓட்டு; நாம் தமிழர் கட்சிக்கு, 13,925 ஓட்டு கிடைத்துள்ளது.கடந்த, 2019 தேர்தலில், தி.மு.க.,வுக்கு, 94,594 ஓட்டு; அ.தி.மு.க.,வுக்கு 76,824 ஓட்டு கிடைத்திருந்தது. கடந்த தேர்தலை விட தி.மு.க.,வுக்கு 9,465 ஓட்டு, அ.தி.மு.க.,வுக்கு, 22,281 ஓட்டு குறைவாக கிடைத்திருக்கிறது. முன்னாள் சபாநாயர் தனபால், எம்.எல்.ஏ.,வாக உள்ள இத்தொகுதியில் அவரது மகன் லேகேஷ் தமிழ்ச்செல்வன் தான், தொகுதி வேட்பாளராக களமிறங்கினார். 'வி.ஐ.பி., தொகுதி', 'அ.தி.மு.க.,வின் கோட்டை' எனப்படும் இங்கு, அக்கட்சிக்கான ஓட்டு கணிசமாக குறைந்திருக்கிறது.

தாராபுரத்தில் பாதிப்பு

தாராபுரம் தனி தொகுதியில் இம்முறை தேர்தலில், தி.மு.க.,,வுக்கு, 95,382 ஓட்டு, அ.தி.மு.க.,வுக்கு, 59,618 ஓட்டு கிடைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி, 8,523 ஓட்டுகளை பெற்றது.கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க.,வுக்கு, 98,368 ஓட்டு, அ.தி.மு.க.,வுக்கு, 64,562 ஓட்டு கிடைத்தது. நாம் தமிழர் கட்சி, 3,596 ஓட்டுகளை மட்டுமே பெற்றிருந்தது. இம்முறை தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு வங்கி லேசாக சரிந்துள்ளது.தேர்தல் முடிவுபடி, தனித் தொகுதியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளுக்கான ஓட்டு வங்கி, பொதுவாக குறையாது; இம்முறை, திருப்பூர் மட்டுமின்றி, அருகேயுள்ள ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் உள்ள தனி தொகுதியிலும், அக்கட்சிகளுக்கான ஓட்டு வங்கி கணிசமாக குறைந்திருக்கிறது.

காரணம் என்ன?

அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், 'தனித் தொகுதியில் பட்டியலின மக்களுக்கு அரசியல், பொருளாதார, சமூக அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான், சில தொகுதிகள் தனி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் கட்சி நிர்வாக கட்டமைப்பு முதற்கொண்டு, அவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவதில்லை. அதன் பாதிப்பு தான் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளின் ஓட்டு சதவீதம் குறைய காரணம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை