உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நொய்யலில் சாயக்கழிவு

நொய்யலில் சாயக்கழிவு

திருப்பூர்; நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன் கூறியதாவது:மங்கலம் பகுதியில், நொய்யலாற்றில் பொது சுத்திகரிப்பு மையத்தின் குழாயிலிருந்து, பல லட்சம் லிட்டர் சாயக்கழிவுநீர் வெளியேறி, இரண்டு நாட்களாக ஆற்றில் கலந்தது. இதுபோன்று சாயக்கழிவுநீர் வெளியேறும் நிகழ்வுகள், ஆங்காங்கே அவ்வப்போது நடக்கின்றன.சாயக்கழிவுகளால், நொய்யலாறு மீண்டும் நச்சுத்தன்மையானதாக மாறுகிறது. சாய ஆலை துறையினரின் விதிமீறல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது. எதிர்கால தலைமுறையினருக்கு, நல்ல சுற்றுச்சூழலை வழங்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமை.சாயக்கழிவுநீர் கலப்பது, உள்ளாட்சி அமைப்புகளின் குப்பை கழிவுகள், மருத்துவ கழிவு, கட்டட கழிவு, இறைச்சி கழிவுகள் கலப்பதால் நொய்யலாறு அழிந்துவருவது குறித்தும், நொய்யலாற்றையும், விவசாயிகள் மற்றும் நீராதாரத்தை பாதுகாக்க கோரி தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி