மேலும் செய்திகள்
இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம்
25-Feb-2025
உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான, மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.உடுமலை பகுதியிலுள்ள மின்நுகர்வோர், தங்களது மின்வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவிக்கும் வகையில், குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அவ்வகையில், உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், இன்று காலை, 11:00 மணிக்கு, செயற்பொறியாளர் அலுவலகத்தில், உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது.உடுமலை கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு, செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், நுகர்வோர் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம்.
25-Feb-2025