| ADDED : ஏப் 02, 2024 12:06 AM
பொங்கலுார்;பொங்கலுார் கிழக்கு ஒன்றியம், அவிநாசிபாளையத்தில், தி.மு.க., கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது.தேர்தல் பணிமனை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்து பேசியதாவது: நமக்கு ஆதரவு தெரிவிக்கின்ற அமைப்புகள், அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புகள், பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நமக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். ஒரு தோப்பில் மரத்தடியில், சிறிய இடத்தில் கூட சந்திக்கலாம். அவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து நாள்தோறும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும்.நமக்குத் தெரிந்த திட்டங்களைப் பற்றியும், நாம் செய்யப்போகும் வாக்குறுதிகளை பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். துண்டு பிரசுரங்களையும் வழங்கலாம். ஊடகம் மூலமாக மக்கள் அனைத்து விஷயங்களையும் அறிந்து இருப்பர். ஏதாவது ஒரு காரணத்தால் வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு வராமல் போய்விடுவர். அவர்களை எல்லாம் வாக்குச்சாவடிக்கு வரவழைக்க வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், பொங்கலுார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.