உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளிகளுக்கு வசதி; முதல் கட்ட நிதி விடுவிப்பு

அரசு பள்ளிகளுக்கு வசதி; முதல் கட்ட நிதி விடுவிப்பு

திருப்பூர்;மத்திய கல்வி அமைச்சகம் மூலம் ஒவ்வொரு கல்வியாண்டும் அரசு பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த மானியத்தொகை விடுவிக்கப்படும். மாநிலம் முழுதும் உள்ள, 37 ஆயிரத்து, 471 அரசு பள்ளிகளுக்கு வழங்குவதற்கு, 61 கோடி ரூபாய் நிதி கடந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ளது.மாநில அளவில், பள்ளி கல்வித்துறை மாநில திட்ட இயக்குனரகம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இத்தொகை பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்ட கல்வித்துறை, 17 வட்டாரங்களை கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுதும் உள்ள, 1,331 அரசு பள்ளிகளின் வளர்ச்சி பணிகளுக்கு முதல்கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இத்தொகை யை கொண்டு அரசு பள்ளிகளில் தனியாக கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர் வசதி, துாய்மை பணி, பள்ளி உபகரணங்கள் வாங்குதல், கட்டட பராமரிப்பு பணி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் உள்ள சூழலுக்கு ஏற்ப ஒரு பள்ளிக்கு பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்க வேண்டும். நிதியை பெறும் பள்ளி கள், பணிகள் நடப்பது குறித்தும், பணி முடிவுற்ற பின், அவ்விபரங்களை முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ