உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நேந்திரன் விலை சரிவு விவசாயிகளுக்கு நெருக்கடி

நேந்திரன் விலை சரிவு விவசாயிகளுக்கு நெருக்கடி

பொங்கலுார்;கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான விவசாயிகள் நேந்திரன் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். நேந்திரன் வாழை கேரளாவிற்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது.ஓணம் பண்டிகையை எதிர்பார்த்து பல விவசாயிகள் நேந்திரன் வாழை சாகுபடி செய்திருந்தனர். அவை தற்போது அறுவடைசெய்யப்பட்டு வருகிறது.கடந்த இரு வாரங்கள் முன் ஒரு கிலோ, 51 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. சமீபத்தில் பெய்த பலத்த மழையால், கேரள மாநிலம், வயநாடு பகுதியில் சில கிராமங்கள் மண்ணில் புதைந்தன. உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.தற்பொழுது நேந்திரன் விலை சரிந்து வருகிறது. விவசாயிகளிடம் கிலோ, 27 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.விலை பாதியாக சரிந்துள்ளதால் நேந்திரன் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை