உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடும்ப நல அறுவை சிகிச்சை; ஆண்களுக்கு அழைப்பு

குடும்ப நல அறுவை சிகிச்சை; ஆண்களுக்கு அழைப்பு

பல்லடம்;ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு, மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து துணை இயக்குனர் கவுரி விடுத்துள்ள அறிக்கை:திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் வரும், 31ம் தேதி நடைபெறுகிறது. பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களால், ஐந்து நிமிடத்தில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.கத்தியின்றி, ரத்தமின்றி எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு, அரசு ஊக்கத்தொகை, 1,100 ரூபாய் மற்றும் கலெக்டர் வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகை, 1,000 உட்பட ஸ்ரீ ரேணுகா டெக்ஸ்டைல்ஸ் வழங்கும், 1,000 ரூபாய் என, மொத்தம், 3,100 ரூபாய் வழங்கப்படும்.இந்த அறுவை சிகிச்சையால், இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கோ, கடின உழைப்புக்கு எந்தவித தடையும் இல்லை. பெண்களுக்கு செய்யப்படும் குடும்ப நல அறுவை சிகிச்சையை விட பல மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. பக்க விளைவுகள் இல்லாத இச்சிகிச்சை முறையை ஏற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த விவரங்களுக்கு, 80728 - 65541 மற்றும் 99422 - 59775 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை