உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பனியன் குடோனுக்கு தீ; 3 பேர் சிறையிலடைப்பு

பனியன் குடோனுக்கு தீ; 3 பேர் சிறையிலடைப்பு

திருப்பூர்; திருப்பூர் மணியகாரம்பாளையம், அமர் ஜோதி நகரை சேர்ந்தவர் ஷெரிப், 46. இவர் பனியன் வேஸ்ட் குடோன் நடத்தி வருகிறார். கடந்த, 9ம் தேதி அதிகாலை, 2:00 மணிக்கு இவரின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. ஆறு மணி நேரம் போராடி தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தீ விபத்தில் சிலர் மீது சந்தேகம் இருப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில், வெங்கடேஷ் என்பவர் வேஸ்ட் குடோன் நடத்தி வந்தார். அதில் வெங்கடேஷ் மற்றும் ஷெரீப் இடையே தொழில் போட்டி இருந்தது. பின் வெங்கடேஷ் துாண்டுதல் பேரில் அவருடன் பணியாற்றும் சிலர் தீ வைத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வெங்கடேஷ், 42, மார்சன்,36, மற்றும் பார்த்திபன்,40, ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை