மேலும் செய்திகள்
குளமாக மாறும் தேசிய நெடுஞ்சாலை
08-Aug-2024
உடுமலை;மடத்துக்குளம் அமராவதி ஆற்றில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் கரையில், கடந்த, 25ம் தேதி, கொழுமம் மேட்டுத்தெருவை சேர்ந்த சேகர் மனைவி சாரதா, 29, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொழுமத்தை சேர்ந்த, தனியார் பஸ் டிரைவர் பாண்டித்துரை, 27, அவரது கள்ளக்காதலி லட்சுமி,32, ஆகியோரை கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:சாரதாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்துவுக்கும் கள்ள தொடர்பு இருப்பது குடும்பத்தினருக்கு தெரிந்துள்ளது. கடந்த, 24ம் தேதி இரவு, கணவரும், இரு உறவினர்களும், சாரதாவையும், மாரிமுத்துவையும் கையும் களவுமாக பிடித்து தாக்கியுள்ளார்.அவர்களிடமிருந்து தப்பிய சாரதா, உறவினரான லட்சுமி வீட்டிற்கு சென்றுள்ளார். லட்சுமி அவரது கள்ளக்காதலரான பாண்டித்துரைக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்.அதன்பின், மதுரைக்கு பஸ் ஏற்றி விடுவதாக கூறி, சாரதாவை பைக்கில் அழைத்து சென்ற பாண்டித்துரை, மடத்துக்குளம் ஆற்றுக்கு அழைத்து சென்று, சாரதாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார். அதன்பின், கை, கால்களை கட்டி, ஆற்றில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது.நடந்த சம்பவத்தை, லட்சுமியிடம் கூறி, இருவரும் தலைமறைவாக இருந்த போது, போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.இவ்வாறு, கூறினர்.
08-Aug-2024