வாக்குறுதியை நிறைவேற்றுங்க! ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் கலெக் டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்கத்தின் மாவட்ட தலைவர் நாட்ராயன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயப்பிரகாசம் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சீரங்கராஜன், மாவட்ட பொருளாளர் சுந்தரராஜன் உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் உறுதி யளித்தபடி, 70 வயது ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்கவேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் முழு செலவையும் அரசே ஏற்கவேண்டும். கோர்ட் உத்தரவுப்படி, 80 வயதை எட்டும்போது, 20 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் கட்டண சலுகையை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும் என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.