உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பைமேட்டில் தீ விபத்து

குப்பைமேட்டில் தீ விபத்து

திருப்பூர்;திருப்பூர் காங்கயம் ரோடு சத்யா நகரில் குப்பை கொட்டப்படும் இடத்தில் நேற்று மதியம் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ காரணமாக, குடியிருப்பு பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையிலான குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். புகை மூட்டம் காரணமாக அப்பகுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டனர்.n காங்கயம் ரோடு, சென்னிமலைபாளையம் அருகில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் மதியம் முதல் தீ பிடித்து எரிந்து வந்தது. இரவு முழுவதும் தீயிலிருந்து வெளியான புகையால் மக்கள் சிரமப்பட்டனர். நேற்று மதியம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து, மழையும் பெய்த காரணத்தால், தீ முழுவதும் அணைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை