நாய் கடித்து ஆடுகள் பலி
திருப்பூர்; வெள்ளகோவில் பச்சாபாளையம் கிராமம், தண்ணீர் பந்தல் வலசை சேர்ந்தவர் சங்கீதா, 35; விவசாயி. கால்நடைகளுடன், 60 ஆடுகளை வளர்த்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பெரிய காட்டு தோட்டத்தில் ஆடுகளை பட்டியில் அடைத்தார். நேற்று காலை பார்த்த போது, நான்கு ஆடுகளை நாய் கடித்து குதறியது தெரிந்தது.மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.