குண்டாஸ் பாய்ந்தது
திருப்பூர்; திருப்பூர், கொங்கு நகர் மகளிர் போலீஸ் ஸ்டே ஷன் எல்லையில், கடந்த மாதம், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, வீட்டுக்கு அழைத்துச் சென்று, கணவன் கண் முன்பே மூன்று பேர் பலாத்காரம் செய்தனர்.இதில் ஈடுபட்ட முகமது தானிஷ், 25 மற்றும் முகமது நாதிம், 23 ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல் மற்றொரு பலாத்கார வழக்கில் சாதிக் 22, என்பரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த மூன்று பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.