உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி கோவிலில் குருபூஜை பெருவிழா

அவிநாசி கோவிலில் குருபூஜை பெருவிழா

அவிநாசி;அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் 91வது குருபூஜை பெருவிழா கொண்டாடப்பட்டது.ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் வரும் நாள், குருபூஜை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறை; சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராண வரலாற்றை கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் பாராயணம் செய்தனர்.முன்னதாக செல்வ விநாயகர், பாதிரி மரத்தம்மன், லிங்கேஸ்வரர், அம்பாள், சுப்ரமணியர், நால்வர் பெருமக்கள் மற்றும் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.சுவாமி - அம்பாள், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனாருடன் நான்கு ரத வீதியிலும் திருவீதி உலா வந்தனர். மாலையில் வெள்ளை யானை வாகனத்தில் சுந்தரர், குதிரை வாகனத்தில் சேரமான் பெருமான் நாயனார் திருவீதி வலம் வந்து இறைவனடி பற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை