மன நலம் குன்றியோருக்கு முடி திருத்தம் செய்து சேவை
திருப்பூர்: எஸ்.பெரியபாளையம் பகுதியில் வேல் பிளஸ் கருணை இல்லம் செயல்படுகிறது. இங்கு மனநலம் குன்றியவர்களுக்கு மறுவாழ்வு தரும் வகையில் மனநல சிகிச்சை வழங்கப்படுகிறது. மன நலம் குன்றியவர்கள் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மையத்தில் திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்த வீனஸ் சலுான் குரூப்ஸ் அமைப்பினர், இலவச முடி திருத்தம் செய்து சேவை மேற்கொண்டனர்.இச்சேவையில் ஈடுபட்ட விஸ்வநாதன் கூறியதாவது:கடந்த, 19 ஆண்டுகளாக எங்கள் குழு சார்பில், மனநலம் குன்றிய மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் பராமரிக்கப்படுவோருக்கு இலவசமாக முடி திருத்த சேவை செய்து வருகிறோம்.சேவையின் போது எங்கள் மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது. இல்ல நிர்வாகிகள் மற்றும் இல்லவாசிகள் வெளிப்படுத்தும் நன்றியுணர்வு எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.