| ADDED : ஏப் 15, 2024 11:51 PM
உடுமலை;கரும்பு சாகுபடியில், ஊடுபயிர் பராமரிப்பதால், மண்ணில் சத்துகளை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, கோவை வேளாண் பல்கலை., யினர் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலை ஏழு குள பாசனம் மற்றும் அமராவதி ஆயக்கட்டு பாசனத்தில் கரும்பு பிரதான சாகுபடியாக உள்ளது. இச்சாகுபடியில், ஊடுபயிர்களையும் சாகுபடி செய்யலாம்.'தண்ணீர் தட்டுப்பாட்டு இல்லாத பகுதிகளில், சோயா மொச்சை, உளுந்து அல்லது பச்சைப்பயறு போன்ற பயிர்களை கரும்பு நடவுசால் மேடுகளின் நடுவில், ஒரு வரிசையில் விதைக்கலாம்.கொளுஞ்சி அல்லது சணப்பை ஊடுபயிராக நடவுசால் மேடுகளில் விதைத்த, 45ம் நாள் பிடுங்கி, கரும்பு வரிசைக்கு அருகே வைத்து, மண் அணைப்பதின் வாயிலாக மண்ணின் சத்துக்கள் அதிகரிப்பதோடு கரும்பில் அதிக மகசூல் பெறலாம்.மேலும், கோ1 என்ற சோயா மொச்சை ஊடுபயிர் செய்வதால், கரும்பின் மகசூல் குறையாமல் சோயா மொச்சையிலிருந்து ஒரு ெஹக்டேருக்கு, 800 கிலோ வரையில் மகசூல் எடுக்கலாம்.கரணை நடவுக்கு முன், கடைசி உழவின் பொழுது தென்னை நார்க்கழிவு, ெஹக்டேருக்கு, 25 டன் என்றளவில் இடுவதுடன், காய்ந்த சோகைகளை 5வது மாதம் உரித்து கரும்பு வரிசைக்கு இடையே பரப்பினால், வறட்சியை சமாளிக்க முடியும்,' என கோவை வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.