| ADDED : ஆக 21, 2024 08:32 PM
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்று வட்டார பகுதிகளில் கட்சி பேதமின்றி, அதிமுக, திமுக நிர்வாகிகள் தலைமையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் விசாரணை குழு அமைத்து மணல் மாபியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் 10 ஏக்கர் பரப்பளவில் ஆத்தா குளம் உள்ளது பரம்பிக்குளம் ஆழியார் திட்ட தண்ணீர் மூலம் குளம் நிரப்பப்பட்டு, அருகில் உள்ள சுற்றுவட்டார கிராம போர்வெல்கள் மற்றும் கிணறுகளில் நீர்மட்டம் உயர நீர் ஆதாரமாக விளங்கி வந்தது தற்போது தமிழக அரசு குளங்களை தூர்வார ஏதுவாக அரசுக்கு சொந்தமான குளங்களில் இருக்கும் வண்டல் மண்களை உரிய அனுமதி பெற்று வண்டல் மஞ்சளை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தது இதயொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குளங்களில் உள்ள வண்டல் மீன்கள் எடுக்கப்பட்டு பானை செய்பவர்களுக்கும் செங்கல் சூளைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது.இந்த நிலையில் அரசின் உத்தரவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மண் கடத்தும் மாபியா கும்பல் வண்டல் மண் எடுக்கிறோம் என்ற போர்வையில் கிராவல் மண் கொள்ளை காங்கேயத்தில் கொடிகட்டி பறந்து வருகிறது ஆளும் கட்சி எதிர்க்கட்சி பேதம் இல்லாமல் திமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து சிவன்மலை ஆத்தா குளம், சாவடி பாளையம் குளம், கத்தாங்கண்ணி, கணபதிபாளையம், நிழலி, ஊதியூர், வெள்ளகோவில், பாலசமுத்தரம் புதூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள குளங்களில் தினமும் நூற்றுக்கனக்கான லாரிகளில் கோடிகணக்கான ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் கடத்தப்பட்டு, அதை வெளி சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு ஒரு லோடு ரூ. 3000 முதல் ரூ. 5000 வரை விற்று வருகின்றனர்இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டாட்சியரோ மண் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை பார்ப்பது தான் என் வேலை எனவும் குளங்களில் மண் எடுப்பது அளவு ஆகியவைகளை வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் வட்டார வளர்ச்சி பொறியாளர்களுமே கண்காணிக்க வேண்டும் என்று நழுவினார் அதேபோல் திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த இரு கட்சியினரும் மணல் கடத்தி வருவதால் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் மணல் மாபியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை குழு அமைத்து எத்தனை யூனிட் டிராவல் மண் திருடப்பட்டது அவை யார் யாரிடம் விற்கப்பட்டது என்பதை குறித்து விசாரணை செய்து மணல் மாபியா கும்பல் மீதும், கடத்தலுக்கு பயன்பட்ட லாரி, ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கேயம் பகுதி சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.