உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காதர்பேட்டை களைகட்டியது

காதர்பேட்டை களைகட்டியது

திருப்பூர்; திருப்பூர் காதர்பேட்டையில், வாரம் முழுவதும் கடைகள் இயங்கினாலும் கூட, ஞாயிறு மற்றும் பண்டிகை காலத்தில், கூடுதல் கடைகள் அமைக்கப்படுகின்றன. சிறப்பு தள்ளுபடி விலையில், ஆடைகள் குவிக்கப்படுகின்றன.அடிக்கடி காதர்பேட்டைக்கு வந்து செல்வோர், குடும்பத்துக்கு தேவையான ஆடைகள், உள்ளாடைகளை, அவ்வப்போது மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.காதர்பேட்டை சில்லரை வியாபாரிகள் வழிகாட்டுதலுடன், முக்கிய வீதிகளிலும் பனியன் ஆடை விற்கும் கடைகள், ஞாயிறு மட்டும் செயல்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்கு பிறகு உற்பத்தியான பல்வகை ஆடைகள், விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன.வங்கதேச ஆடை வரத்தும் குறைந்துள்ளது; உள்ளூரில் கூடுதல் ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆடைகளை வாங்க, காதர்பேட்டை பகுதியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.புத்தாடை உற்பத்தி வேகம்தீபாவளிக்கு பிறகு, இரண்டு மாதங்கள் மார்க்கெட் மந்தமாகிவிடும். அந்த இடைவெளியில், பொங்கல் பண்டிகையும் வந்துவிடும். அதற்கு பிறகுதான், புதிய பனியன் ஆடை உற்பத்தி வேகமெடுக்கும். மாநிலம் முழுவதும் உள்ள சந்தைகளில் இருந்து ஆர்டர் வரும்; அதன்படி, புதிய ஆடை உற்பத்தி வேகமெடுத்துள்ளதால், காதர்பேட்டைக்கு புதிய ஆடைகள் வருகின்றன; அவற்றை வாங்க வரும் மக்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது.- பனியன் வியாபாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை