உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடுகளுக்கு தீவன பற்றாக்குறை; வெங்காய சருகுக்கு திடீர் கிராக்கி

ஆடுகளுக்கு தீவன பற்றாக்குறை; வெங்காய சருகுக்கு திடீர் கிராக்கி

திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை மழை பொய்த்தது. கால்நடைகளுக்கு கடும் தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாடுகளை வைத்துள்ள விவசாயிகள் சோளத்தட்டு, வைக்கோல் போன்றவற்றைவிலைக்கு வாங்கியும், அடர் தீவனங்களை கொடுத்தும் காப்பாற்றி வருகின்றனர். ஆடு வளர்க்கும் விவசாயிகளின் நிலைமை மோசமாக உள்ளது. ஆடுகள் புற்களையே அதிகம் மேயும். ஆடுகளுக்கான புல் வகைகளை வெளியில் வாங்க முடியாது. ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வெங்காயச் சருகுகளை தேடி கொண்டு வந்து ஆடுகளுக்கு உணவாக கொடுத்து காப்பாற்றி வருகின்றனர். குப்பையில் கொட்டப்படும் வெங்காய சருகுகளுக்கு வறட்சி காரணமாக திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி