உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜெய்வாபாய் பள்ளி தளங்கள் இணைக்க இணைப்பு பாலம் 

ஜெய்வாபாய் பள்ளி தளங்கள் இணைக்க இணைப்பு பாலம் 

திருப்பூர்; திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியரின் சிரமத்தை தவிர்க்க, ஒரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்துக்கு செல்ல, இணைப்பு பாலம் கட்டப்பட்டுள்ளது.இதுவரை தலைமை ஆசிரியர் அறை, பிளஸ் 2 வகுப்பறை செயல்படும் பள்ளியின் மைய வளாகத்தில் இருந்து பிற வகுப்பறைகளுக்கு செல்ல நேரடி வழி இல்லை.அருகருகே இருந்த போதும், ஒரு தளத்தில் இருந்து கிழே இறங்கி, மீண்டும் படிக்கட்டுகள் ஏறி, மற்றொரு தளத்துக்கு செல்ல வேண்டிய சிரமம் இருந்தது. ஆசிரியர், மாணவியரின் சிரமம் நேரம் விரயம் தவிர்க்க இணைப்பு பாலம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி