உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேணுகோபாலசுவாமி கோவிலில் மகா கும்பாபிேஷகம் கோலாகலம்

வேணுகோபாலசுவாமி கோவிலில் மகா கும்பாபிேஷகம் கோலாகலம்

உடுமலை; உடுமலை அருகே வேணுகோபாலசுவாமி கோவிலில் நடந்த கும்பாபிேஷகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை சின்ன வாளவாடி, ஸ்ரீ ருக்மணி ஸ்ரீ சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. நுாற்றாண்டு பழமையான இக்கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிேஷக யாக சாலை பூஜைகள், கடந்த, 10ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, மூன்று கால பூஜைகள் நடந்தன.நேற்று காலை, 7:00 மணிக்கு, திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை மற்றும் யாக சாலை பூஜை நிறைவு, கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.காலை, 10: 00 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிேஷகம் மற்றும் சுவாமிகளுக்கு மகா கும்பாபிேஷகம், அபிேஷகம், அலங்கார பூஜைகளும், மாலை, 6:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.நிகழ்ச்சியில், வாளவாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !