உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளியை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

தொழிலாளியை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை

திருப்பூர்; திருப்பூர், காவிலிபாளையம் முதல் வீதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 45. அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி என்பவருடன் வழித்தடம் தொடர்பாக தகராறு செய்தார்.கடந்த 2008ம் ஆண்டில், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. இதில் பாலசுப்ரமணியம், ஆவேசத்தில் ரங்கசாமியை கடுமையாகப் பேசியதோடு தாக்கி காயப்படுத்தினார்.இது குறித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் ஜே.எம்., எண்: 3 மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இதில் பாலசுப்ரமணியத்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் முருகேசன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ