உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறு, சிறு தொழில் மேம்பாடு; அரசு திட்டம் கைகொடுக்கும்: மத்திய செயலர் அறிவுரை

குறு, சிறு தொழில் மேம்பாடு; அரசு திட்டம் கைகொடுக்கும்: மத்திய செயலர் அறிவுரை

திருப்பூர் : பலவஞ்சிபாளையத்தில் அமைந்துள்ள, பொது பயன்பாட்டு மையத்தைப் பார்வையிட்ட மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலர் தாஸ், ''குறு, சிறு தொழில்கள் மேம்பட அரசு திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று அறிவுறுத்தினார்.ஆயத்த ஆடை உற்பத்திக்கான பொது பயன்பாட்டு மையம், பலவஞ்சிபாளையத்ததில் அமைந்துள்ளது. அரசு மானியம் உட்பட, மொத்தம், 16.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 40 நிறுவனங்கள் இணைந்து. பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஐம்பதாயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டண சேவை

மையத்தில், 'டிஜிட்டல் ரோல் பிரின்டிங்', 'ஓவல் பிரின்டிங்', 'ரவுண்ட் பிரின்டிங்', 'டிஜிட்டல் டெஸ்ட் பிரின்டிங்', 'சப்ளிமேஷன்', 'ரேப்பியர் லேபிள் மெஷின்' மற்றும் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிநவீன மெஷின்களை இறக்குமதி செய்ய முடியாத, குறு, சிறு நிறுவனங்கள், பொது பயன்பாட்டு மையத்தை, குறைந்த கட்டணத்தில், பயன்படுத்தி வருகின்றன.ஆயத்த ஆடை உற்பத்திக்கான பொது பயன்பாட்டு மையத்தை, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலர் தாஸ் நேற்று, நேரில் ஆய்வு செய்தார். அரசு மானியத்துடன், குறு, சிறு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பொது பயன்பாட்டு மைய செயல்பாடுகள், இதன் மூலம் பயன்பெறும் தொழில்முனைவோர் விவரங்களை கேட்டறிந்தார்.பொது பயன்பாட்டு மைய நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருஞானசம்பந்தம், சிவசங்கர் ஆகியோர், பயன் பாடுகளை விளக்கினர்.நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம் கூறுகையில்,'' புதிய தொழில்நுட்பத்தை, அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்பட்டது. உறுப்பினர்கள் மட்டுமல்லாது, மற்ற நிறுவனங்களும், குறைந்த கட்டணத்தில் சேவை பெற்று வருகின்றன.மையத்தை நேரில் ஆய்வு செய்த, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலர் தாஸ், 'அரசு திட்டத்தை பயன்படுத்தி, குறு, சிறு தொழில்கள் மேம்பட வேண்டும்; தொழில்துறையினர் அரசு திட்டங்களை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று அறிவுறுத்தினார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி