மேலும் செய்திகள்
160 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா
05-Mar-2025
திருப்பூர்: அரசு பட்டா வழங்கிய நிலத்துக்கு வழிப்பாதை அமைக்க அமைச்சர் சாமிநாதன் இடம் வழங்கினார்.காங்கயம் பகுதியில், நாகப்பாளையம் ஆதி திராவிடர் காலனி பகுதியில், 95 பேருக்கு அரசு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியுள்ளது.இப்பகுதிக்கு சென்று வர வழித்தடம் இல்லை.இதையடுத்து அமைச்சர் சாமிநாதன் தனது சொந்த நிதியிலிருந்து 5 சென்ட் இடம் வாங்கி தனது மகன் ஆதவன் பெயரில் இதை வருவாய்த்துறையினரிடம் வழங்கினார்.காங்கயத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் இதற்கான ஆவணங்களை, டி.ஆர்.ஓ., கார்த்திகேயனிடம் வழங்கினார். திருப்பூர் மாநகராட்சி, 4வது மண்டல குழு தலைவர் பத்மநாபன், முத்துார் பேரூராட்சி தலைவர் அப்பு உட்பட பலர் பங்கேற்றனர்.
05-Mar-2025