உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முகாம் நடத்தியதில் குளறுபடி: காத்திருந்த பெண்கள்

முகாம் நடத்தியதில் குளறுபடி: காத்திருந்த பெண்கள்

உடுமலை;மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், ஏராளமான பெண்கள் திரண்ட நிலையில், உரிய ஏற்பாடுகள் செய்யாததால் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு அளித்தனர்.மடத்துக்குளம் தாலுகா, துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், துங்காவியிலுள்ள முருகன் மண்டபத்தில் நடந்தது.அனைத்து அரசு துறைகள் சார்பில், மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஒரு கி.மீ., துாரத்திற்கு, பெண்கள் நீண்ட வரிசையில், வெயிலிலும், மழையிலும் காத்திருந்தனர்.மெட்ராத்தி ஊராட்சியில், ராமேகவுண்டன்புதுார், இச்சிப்பட்டி, பணத்தம்பட்டி, ஒட்டமடம், துங்காவி ஊராட்சியில், மலையாண்டிபட்டணம், வஞ்சிபுரம், உடையார்பாளையம், வெங்கிட்டாபுரம், சீலநாயக்கன்பட்டி என ஏராளமான கிராமங்கள் உள்ளன.பொதுமக்கள் வருகை குறித்து, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல், ஒரே நாளில், சிறிய அளவிலான மண்டபத்தில், முகாம் நடத்த எற்பாடு செய்ததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதனையடுத்து, கூட்டுறவு சங்கங்கள், தனியார் இ - சேவை மைய பணியாளர்கள், கூடுதல் அரசு துறை அலுவலர்களை வரவழைத்து, பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை என ஏராளமானவர்கள் விண்ணப்பங்கள் அளித்துள்ள நிலையில், உரிய பரிசீலனை செய்து, பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய அரசு துறை அதிகாரிகளும், அரசும் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ