மேலும் செய்திகள்
அரசு மகளிர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
25-Feb-2025
கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மாநாடு
23-Feb-2025
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, கம்ப்யூட்டர் அறிவியல் துறை சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் 'அறிவுத்திறன் தொழில்நுட்பத்தின் நவீன வெளிப்பாடு' என்ற தலைப்பில், கல்லுாரி அரங்கில் நடந்தது.கருத்தரங்கிற்கு பேராசிரியர் விநாயகமூர்த்தி, தலைமை வகித்தார். துறைத்தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். பேராசிரியர் குமார் கொம்பையா, வரவேற்றார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜெயின் பல்கலை., பேராசிரியர் முருகன், புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் சுரேந்திரன், உடுமலை அரசு கல்லுாரி கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.கேரளாவைச் சேர்ந்த ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள், பாரதியார், எஸ்.ஆர்.எம்., உட்பட பல்வேறு பல்கலை., பேராசிரியர்கள் பங்கேற்றனர். கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, திருப்பூர் குமரன் கல்லுாரி, உடுமலை அரசு கல்லுாரி உட்பட பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிக்கண்ணா அரசுக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், செய்திருந்தார்.
25-Feb-2025
23-Feb-2025