உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / என்றும் தீராத அவலம்; ஆய்வு மட்டும் பலன் தருமா? 

என்றும் தீராத அவலம்; ஆய்வு மட்டும் பலன் தருமா? 

திருப்பூர் : திருப்பூர் நகர் மட்டுமின்றி ஊரகப் பகுதிகளில், சில மணி நேரம் மழை பெய்தாலே, ரோடெங்கும் வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகள், ரோட்டோர பள்ளங்கள் என மழை நீர் பல இடங்களிலும் தேங்கி நிற்கிறது.திருப்பூர் நகரின் வடக்கு பகுதியில் வீடுகளில் மழைநீர் புகும் சம்பவமும், தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. பாதிப்பு ஏற்பட்ட இடங்களில், மாநகராட்சி மேயர், கமிஷனர், கவுன்சிலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, சீரமைப்பு பணிகளை முடுக்கிவிடுவதும், வாடிக்கையான நிகழ்வாக இருக்கிறது.அதேபோல், பிற உள்ளாட்சி நிர்வாகத்தினரும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் மழை பாதிப்புகளை சமாளிக்க, கள ஆய்வு மேற்கொள்கின்றனர்; ஆலோசனை நடத்துகின்றனர். இருப்பினும், இதுபோன்ற நடவடிக்கைகள், எந்தளவு பலன் தருகிறது என்பதே, பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.கடந்தாண்டு மழையின் போது, வெள்ளத்தால் பாதிப்பு இடங்களில் கள ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வரும் நாட்களில், மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்து சென்றனர்; மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தினர். ஆனால், பலன் இல்லை.

நடவடிக்கை பூஜ்யம்!

திருப்பூர் - அவிநாசி சாலையில் அனுப்பர்பாளையம், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட இடங்களில், சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பது வழக்கம். 'கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பால், கால்வாய் அடைபட்டு இருப்பது தான், மழைநீர் ரோட்டில் பெருக்கெடுக்க காரணம். இதனை உள்ளாட்சி நிர்வாகத்தினர் தான் ஆய்வு செய்து, சரி செய்ய வேண்டும்' என, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மழைக்கால பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம், அதற்கான தீர்வு என்ன என்பது தெரிந்தும், சம்மந்தப்பட்ட துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தான், மழையின் போது மீண்டும், மீண்டும் ஒரே இடத்தில் பாதிப்புகள் தொடர்கின்றன.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !