திருப்பூர்;பின்னலாடை தொழிலின் அனைத்து துறையினருக்கும் தேவையான அதிநவீன இயந்திரங்களின் அணிவகுப்பாக, 'நிட்ேஷா' கண்காட்சி அமைந்துள்ளதாக, தொழில் அமைப்பினர் வரவேற்றுள்ளனர். காலத்திற்கேற்ப தானியங்கி இயந்திரங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.திருப்பூர் -- காங்கயம் ரோடு, ஹவுசிங் யூனிட் அருகே, 'டாப் லைட்' மைதானத்தில், 22வது 'நிட்ேஷா' கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சி அரங்குகளைத் தொழில்துறையினர் பார்வையிட்டனர். அவர்கள் கூறியதாவது: அனைவரும்பார்வையிட வேண்டும்
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன்:நிட்ேஷா கண்காட்சி, சீனா, ஐரோப்பாவில் நடப்பதுபோல், எழுச்சியுடன் திருப்பூரில் துவங்கியுள்ளது. தொழில்துறையினர் மட்டுமல்லாது, தொழிலாளர்களும் கண்காட்சியை பார்வையிட வேண்டும். அனைத்து நிறுவனங்களும், கடை நிலை ஊழியர் வரை, நேரில் வந்து கண்காட்சியை பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும். பிரின்டிங் இயந்திரங்கள் அதிக அளவு இருந்தாலும், அனைத்து இயந்திரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிநாடு செல்லாமல் இங்கேயே...
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன்:வெளிநாடு சென்று கண்காட்சியை பார்க்க அதிக செலவாகும். திருப்பூர் தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், நிட்ேஷா கண்காட்சி நடத்தப்படுகிறது. எல்லோரும், அமெரிக்கா, ஐரோப்பா கண்காட்சிக்கு சென்று பார்க்க முடியாது; திருப்பூரில் நடைபெற உள்ள கண்காட்சியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆட்டோமேஷன்இயந்திரங்கள் தேவை
பின்னல் துணி உற்பத்தியாளர் (நிட்மா) சங்க தலைவர் ரத்தினசாமி:வங்கதேசத்தில் நடந்த குழப்பத்தால், வெளிநாட்டு வர்த்தகர்கள், இந்தியாவுக்கு மாறலாம் என்று விரும்புகின்றனர். திருப்பூருக்கும் சாதகமாக மாறியுள்ளது; இந்நிலையில், இக்கண்காட்சி நடத்துவது ஊக்குவிப்பாக அமையும்.ஐரோப்பா, சீனா, அமெரிக்காவுக்கு சென்று பார்வையிட்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. வெளிநாட்டுக் கண்காட்சியை பார்த்தது போல், திருப்பூரில் கண்காட்சி நடத்துவது மகழ்ச்சியாக இருக்கிறது; அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதிவேக நிட்டிங் இயந்திரம் வந்துவிட்டது; தானியங்கி (ஆட்டோமேஷன்) இயந்திரம் வந்தால் மட்டுமே தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இக்கண்காட்சியில், அதிகளவில் தானியங்கி இயந்திரங்கள் வந்துள்ளன. நன்னீர் ஓடும்நொய்யலாறு
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன்:ஒவ்வொரு ஆண்டும், தொழில்நுட்பம் 'அப்டேட்' ஆகிக்கொண்டே இருக்கிறது. புதிய இயந்திரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. சாயத்தொழிலில், பல்வேறு இயந்திரங்கள் வந்துள்ளன. சாயத்தொழில் மேம்பாட்டுக்காக, தேவையான பயிற்சி அளிக்கும் மையம் துவங்கியுள்ளோம்.முன்பு செய்த தவறுகளுக்கு பிராய்ச்சித்தம் செய்தது போல், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பின்பற்றி வருகிறோம். அதன் பயனாக, மீண்டும் ஆற்றில் நன்னீர் ஓடுவதாக, விவசாயிகளே பாராட்டியுள்ளனர். மேலும் சில இடங்களில் குளறுபடி இருந்தாலும், எதிர்காலத்தில் முழுமையாக சீராக்கப்படும். ஜவுளி ஆராய்ச்சிமையம் வேண்டும்
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம்:திருப்பூர் எந்தவொரு நிலையில் இருந்தாலும், 'நிட்ேஷா' கண்காட்சி தடையின்றி நடந்து வருகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், 'சைமா' தலைமையில், நிரந்தர கண்காட்சி மையம், ஜவுளி ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். அரசை மட்டுமே நம்பியிருக்காமல், தொழில்துறையினர் கிளஸ்டர் அமைத்து, அரசு வழிகாட்டுதலுடன் முயற்சிக்கலாம். 'டிஜிட்டல்' பிரின்டிங் வளர்ச்சி
திருப்பூர் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த்:ஒவ்வொரு ஆண்டும், கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. நிட்ேஷா என்பதை 'பிரின்ட்ேஷா' என்று கூறும் வகையில், பிரின்டிங் துறைக்குஅதிக முக்கியத்துவம் அளித்துள்ளனர். மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பில் பிரின்டிங் முக்கியம் என்பதை உணர்த்தியுள்ளனர்.சீனாவில்தான் டிஜிட்டல் தொழில்நுட்பம் அதிகம் இருக்கிறது; தற்போது இந்தியாவில் வந்துள்ளது. உள்நாட்டிலேயே, 'டிஜிட்டல்' பிரின்ட் தயாரிக்கும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளோம். 'டிஜிட்டல்' இங்க்கை இந்தியாவில் தயாரிக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளோம். 'ஸ்கிரீன் பிரின்டிங்' செலவு அதிகமாகிறது; டிஜிட்டல் பிரின்டிங் வளர்ந்தால் உற்பத்தி குறையும். மதிப்பு கூட்டிய ஆடை உற்பத்திக்கு, இக்கண்காட்சி பேருதவியாக இருக்கும். மறுசுழற்சி நுால், துணிக்கு வரவேற்பு
தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க(சிம்கா) தலைவர் விவேகானந்தன்:நிட்டிங் பிரிவுக்கு அதிநவீன இயந்திரங்கள் வந்துள்ளன. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்திக்கு தேவையான நவீன இயந்திரங்கள் அதிகம் வந்துள்ளன. மறுசுழற்சி நுால், துணி மற்றும் ஆடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது; அதுதொடர்பான ஸ்டால்களும் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கது.நிட்ேஷா கண்காட்சியை பொறுத்தவரை, திருப்பூரின் தேவைகளை பூர்த்தி செய்யும் இயந்திரங்களை இறக்கியுள்ளது. அனைவரும் வந்து பார்க்க வேண்டும். அடிக்கடி கண்காட்சிகள் அவசியம்
திருப்பூர் தொழில்கூட்டமைப்பு (டிப்) தலைவர் மணி:பின்னலாடை 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களும், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. நிட்ேஷா கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்; அடிக்கடி இக்கண்காட்சி நடத்தப்பட வேண்டும்.நிரந்தரக் கண்காட்சிவளாகம் அமையுமா?திருப்பூரில் இயந்திரங்கள் இடம்பெறும் வகையிலான கண்காட்சிகளை நடத்த நிரந்தர வளாகம் இல்லை. கோவை 'கொடிசியா' போன்று வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. நிரந்தரக் கண்காட்சி வளாகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வரைச் சென்று சந்திக்கலாம் என்று 'சைமா' தலைவர் ஈஸ்வரன் யோசனை தெரிவித்தார்.