சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை; போக்குவரத்து பாதிப்பு
* போக்குவரத்து நெரிசல்
வால்பாறை நகரில், சுற்றுலா வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க வால்பாறை போலீசார் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -ராம்குமார், வால்பாறை. * ரோடு சேதம்
பொள்ளாச்சி, வி.என்.டி., நகர் பகுதியில் உள்ள ரோடு, பல நாட்களாக சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் பலர் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் இவ்வழியில் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுவதால், நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த ரோட்டை விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும்.- - யஸ்வந்த், பொள்ளாச்சி. கால்வாயில் புதர்
கிணத்துக்கடவு, பெரியகளந்தையில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் அதிக அளவு புதர்கள் இருப்பதால், கழிவு நீர் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில், இந்த கால்வாயில் உள்ள புதர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -மணி, நெகமம். நிழற்கூரை தேவை
கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப்பில் பயணியர் பலர் திறந்த வெளியில் நிற்பதால் சிரமப்படுகின்றனர். பயணியர்கள் நலன் கருதி இங்கு நிழற்கூரையோ அல்லது மேற்கூரையோ அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - கண்ணன், கிணத்துக்கடவு. கால்வாய் சீரமைப்பு தேவை
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்டு அருகே சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் உள்ள கழிவு நீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளதால் கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியில் செல்பவர்கள் கடும் சிரமத்துடன் சென்று வருவதால், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - ஆறுச்சாமி, கிணத்துக்கடவு. * போக்குவரத்துக்கு இடையூறு
உடுமலை -பழநி ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக வரிசையாக சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவராமன், உடுமலை. சுற்றுச்சூழல் பாதிப்பு
உடுமலை பி.எஸ்.என்.எல்.குடியிருப்பு அருகே குப்பையை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர்.இதனால், அவ்வழியாக செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே, குப்பைக்கு தீ வைப்போர் மீது நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கருப்பசாமி, உடுமலை. நகராட்சி கவனத்துக்கு
உடுமலை, சீனிவாசா வீதி, கல்பனா ரோடு சந்திப்பு ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை குழியின் மூடி உள் இறங்கி உள்ளது. எந்த நேரத்திலும் சிதிலமடைந்து விழும் நிலையில் இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு ஆபத்தாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜேந்திரன், உடுமலை. விதிமீறும் வாகன ஓட்டுநர்கள்
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் எதிரே ஒருவழி பாதையில் வாகன ஓட்டுநர்கள் விதிமுறை மீறி எதிர்புறமும் வருகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களும் எதிர்புறம் வாகனம் வரும்போது ஒதுங்கி செல்லவும் வழியில்லாமல் அவதிப்படுகின்றனர்.- சுமதி, உடுமலை. நோய் பரவும் அபாயம்
உடுமலை, கண்ணம்மநாயக்கனுார் பகுதியில் குப்பைக்கழிவுகள் நீர்நிலை அருகே கொட்டப்படுகின்றன. அந்த கழிவுகளை கால்நடைகளும் மேய்கிறது. திறந்த வெளியில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்தொற்றலுக்கான சூழலாகவும் மாறுகிறது.- நந்தினி, கண்ணம்மநாயக்கனுார். ரோட்டை சீரமையுங்க
உடுமலை, பெரியகோட்டை சிவசக்தி காலனி ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. ரோட்டின் பாதி வரை குடியிருப்பு வாசிகளும் ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியில் வாகனம் ஓட்டுவதற்கு சிரமப்படுகின்றனர். குண்டு குழியான ரோட்டினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.- ஜெயராம், பெரியகோட்டை.