உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரு லட்சம் மனுக்கள்  அனுப்ப பகுதி நேர ஆசிரியர்கள் முடிவு

ஒரு லட்சம் மனுக்கள்  அனுப்ப பகுதி நேர ஆசிரியர்கள் முடிவு

திருப்பூர்: 'பட்ஜெட் அறிவிப்பில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தர அறிவிப்பு வெளியிட வேண்டும்' என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை:தி.மு.க., தனது தேர்தல் அறிக்கை, வாக்குறுதி எண். 181ல், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், 12, 500 ரூபாய் தொகுப்பூதியத்தில், இன்றைய விலைவாசி உயர்வின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் பணி செய்து வருகின்றனர்.எனவே, 14 ஆண்டு காலமாக அவர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். இது தொடர்பாக கவர்னர், முதல்வர், துணை முதல்வர், தலைமை செயலாளர், கல்வியமைச்சர், நிதியமைச்சர், பள்ளி கல்விச் செயலாளர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர், நிதி செயலர் மற்றும் தி.மு.க., தேர்தல் அறிக்கை குழு ஆகியோருக்கு, 1 லட்சம் மனுக்கள் அனுப்புவது என்ற முடிவுடன், பகுதி நேர ஆசிரியர்கள் மனு அனுப்பி வருகின்றனர்.வரும் பட்ஜெட்டில், பணி நிரந்தரம் தொடர்பான அறிவிப்பு வெளியாக வேண்டும் என்பதே, ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு.முதல்வர், மாவட்ட வாரியாக ஆய்வு கூட்டங்களில் பங்கேற்கும் போது, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறிய தேர்தல் வாக்குறுதியை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி