உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இ.எஸ்.ஐ., காப்பீடு மூலம் பெண்ணுக்கு ஓய்வூதியம்

இ.எஸ்.ஐ., காப்பீடு மூலம் பெண்ணுக்கு ஓய்வூதியம்

பல்லடம்; மடத்துக்குளத்தை சேர்ந்தவர் உதயகுமார், 27. சித்தம்பலத்தில், கறிக்கோழி பண்ணை ஒன்றில் டிரைவர். மனைவி பாக்கியலட்சுமி, 20, ஒரு வயது மகளுடன் பல்லடத்தில் வசித்தார். கடந்த, 2024 ஏப்., 24ல், பணி தொடர்பாக, தளவாய்பட்டினம் செல்லும்போது, லாரி, மரத்தில் மோதியதில் உதயகுமார் பலியானார். பாக்கியலட்சுமிக்கு, 1,51,434 ரூபாய் உதவிப் பயன்; 16,110 ரூபாய்க்கான மாதாந்திர ஓய்வூதியத்துக்கான காசோலைகளை, இ.எஸ்.ஐ., கிளை மேலாளர் ராஜா வழங்கினார். காசாளர் ஜெயக்குமார், அலுவலர் சவுந்தரராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இ.எஸ்.ஐ., கிளை மேலாளர் கூறுகையில், ''இ.எஸ்.ஐ., காப்பீட்டின் கீழ் உள்ளவர்கள், பணியின் போதோ அல்லது பணியில் இருந்து திரும்பும் போதோ, சாலை விபத்து காரணமாக உயிரிழந்தால், தொழில் சார்ந்த விபத்தாக கருதி, பாதிக்கப்படும் குடும்பத்துக்கு வாழ்நாள் முழுவதும் உதவி பயன் பகிர்ந்து அளிக்கப்படும். ஆண் குழந்தைகளுக்கு, 25 வயது வரையும், பெண் குழந்தைகளுக்கு, திருமணம் ஆகும் வரையும் சார்ந்தோர் உதவி பயன் கிடைக்கும். அவ்வகையில், பாக்கியலட்சுமி இப்பயனைப் பெறுகிறார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !