உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயன்பாட்டில் இருந்த போர்வெல் மூடல் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிப்பு

பயன்பாட்டில் இருந்த போர்வெல் மூடல் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிப்பு

உடுமலை; உடுமலை நாராயணன் காலனி பகுதியில், பயன்பாட்டில் இருந்த போர்வெல் மூடப்பட்டதால் பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டில், நாராயணன் காலனி பகுதி உள்ளது. இப்பகுதியில், நுாற்றுக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. திருமூர்த்திமலை அணையை ஆதாரமாகக்கொண்டு உடுமலை நகரில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இருப்பதால், மற்ற பயன்பாடுகளுக்கென அடிகுழாய் வாயிலாக கிடைக்கும் போர்வெல் தண்ணீரை, மக்கள் பயன்படுத்தி வந்தனர்.குடிநீர் தடைபடும் நாட்களில், இந்த தண்ணீர் தான் அப்பகுதியினரின் அனைத்து தேவைகளுக்கான நீராக இருக்கிறது.இப்பகுதியையொட்டி கழுத்தறுத்தான் ஓடை செல்வதால், இரண்டாண்டுகளுக்கு முன்பு ஓடை துார்வாரப்பட்டு, புதிதாக கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கட்டுமான பணிகளையொட்டி போர்வெல் பயன்பாடு நிறுத்தப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பணிகள் நிறைவு பெற்ற பின்னரும், பல மாதங்களை கடந்தும், மீண்டும் போர்வெல் புதுபிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது:எல்லா தேவைகளுக்கும், குடிநீரை மட்டுமே நம்பி இருக்க முடிவதில்லை. மேலும், குடிநீரும் அளவாக மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. இதனால் போர்வெல் வாயிலாக தண்ணீர் எடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஆனால் அதை, சாக்கடை கால்வாய் கட்டும் பணிக்காக மூடி வைத்துவிட்டு, இன்னும் பயன்பாட்டுக்கு விடாமல் இருப்பதால் சிரமமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, உடுமலை நகரில் குடிநீர் வினியோகம் சில நாட்கள் நிறுத்தப்பட்டது.அப்போது தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டுவிட்டோம். போர்வெல் குழாய் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை