உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் எடுக்க அனுமதி; கலெக்டரிடம் மனு

மண் எடுக்க அனுமதி; கலெக்டரிடம் மனு

திருப்பூர்:உடுமலை பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:உடுமலை வட்டாரத்தில், பல தலைமுறையாக மண்பாண்ட உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். மண்பாண்டம் உற்பத்திக்கு உகந்த மண், கொழுமம், முத்துக்குளத்தில் மட்டுமே உள்ளது. இந்த குளத்தில் மண் எடுக்க அனுமதி கேட்டு, தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகிறோம்.தற்போது முத்துக்குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் மண் எடுக்க முடியாது. எனவே, கோவை கிணத்துக்கடவு கோதவாடி குயவன் குட்டையில் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ