உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழாய் பதிக்க குழி மின் கம்பம் சரிந்தது

குழாய் பதிக்க குழி மின் கம்பம் சரிந்தது

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 6வது வார்டு நல்லாத்துப்பாளையம் பகுதியில், அண்மையில் தார் ரோடு அமைக்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணி துவங்கியது. இதற்காக ரோட்டோரம் குழி தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.குழி தோண்டும் பணி நடந்த இடத்திலிருந்த ஒரு மின் கம்பம் இதனால் பாதிக்கப்பட்டு சரியத் துவங்கியது. உடனே தகவல் அளிக்கப்பட்டு மின் வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்தனர். உடனடியாக மின் சப்ளை நிறுத்தப்பட்டு, கம்பம் சரி செய்து, பாதுகாப்பாக அமைக்கப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை