உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனைத்து மாணவர்களுக்கும் அஞ்சலக கணக்கு கட்டாயம்

அனைத்து மாணவர்களுக்கும் அஞ்சலக கணக்கு கட்டாயம்

திருப்பூர்: அனைத்து பள்ளி மாணவருக்கும், அஞ்சலக கணக்கு துவக்க வேண்டுமென, ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், சமூகநல அலுவலர் ரஞ்சிதாதேவி, மாவட்ட கல்வி அலுவலர்கள் காளிமுத்து, ராஜாமணி, தேவராஜன், உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாணவர் வருகை பதிவு, புதுமைப்பெண் திட்ட பதிவு, இடைநிற்றல் மாணவர்கள் விவரம், எண்ணும் எழுத்தும் திட்டம், உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் லேப், நுாலக புத்தக பதிவு என, அனைத்து வகை பணிகள் தொடர்பாக, கலெக்டர் ஆய்வு நடத்தினார்.அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், அஞ்சலக கணக்கு துவக்குவது, மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிந்து உதவி செய்வது, பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி விகிதம் பள்ளி பார்வை செயலிகள் தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பு கவனத்துடன் செயல்படுத்த கலெக்டர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி