உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரியல் எஸ்டேட் இடைத்தரகர் தற்கொலை

ரியல் எஸ்டேட் இடைத்தரகர் தற்கொலை

அவிநாசி; ரியல் எஸ்டேட் இடைத்தரகர் துாக்கில் தற்கொலை செய்து கொண்டார்.அவிநாசி, கஸ்துாரிபா வீதியை சேர்ந்த தங்கவேல் மகன் செந்தில்பிரபு 45. ரியல் எஸ்டேட் தொழிலில் இடைத்தரகராக இருந்து வந்தார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.குடும்பத்தில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மனைவி சரண்யா பழநிக்கு சென்றுள்ளார்.வீட்டில் தனியாக இருந்த செந்தில்பிரபு வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்த, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !