உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 17 மினி பஸ்கள் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை

17 மினி பஸ்கள் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை

திருப்பூர்;திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலித்தபடி இயங்கி, 17 மினிபஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்படி, இணை போக்குவரத்து கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.திருப்பூரில் இயங்கும் மினிபஸ்கள் இரவு, அதிகாலை நேரத்தில் பயணிகளிடம் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார்கள் வந்தன. இதனை கண்காணிக்க மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வேலுமணி, விஜயா, நிர்மலாதேவி, பாஸ்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய தொடர் ஆய்வில் வடக்கு பகுதியில் பத்து மினிபஸ்களும், தெற்கில், ஏழு மினிபஸ்களும் விதிமீறி கூடுதல் கட்டணம் பயணிகளிடம் வசூலித்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பஸ் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆர்.டி.ஓ., ஆனந்த், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைக்கும் படி, கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனருக்கு கடிதம் அனுப்பிஉள்ளார். அவர் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், மினி பஸ் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை