உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை பணி துவங்கியது

சாலை பணி துவங்கியது

பொங்கலுார் : பொங்கலுார் அம்மா பாளையத்தில் வீதி களுக்கு சிமென்ட் ரோடு, மாவட்ட கவுன்சிலர் நிதி பத்து லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி தலைமையில் நடந்தது. முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், வலுப்பூரம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் சிதம்பரம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், பாலசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொங்குட்டிபாளையம் ஊராட்சி பால்மடையில் 3.60 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் ரோடு, வடக்கு அவிநாசி பாளையத்தில் 1.40 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் ரோடு, தொங்குட்டிபாளையம் ஊராட்சி கைகாட்டியில் 4.32 லட்சம் ரூபாய்க்கு சிமென்ட் ரோடு போடுவதற்கான பூமி பூஜை நடந்தது. மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி பூமி பூஜையை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை