ரூ.550 பிரிமியம்; ரூ.10 லட்சம் காப்பீடு
திருப்பூர்: இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் மற்றும் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் இணைந்து, காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பது மற்றும் விழிப்புணர்வு முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.350 ரூபாய் பிரிமியம் தொகைக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலும்; 550 ரூபாய் பிரிமியம் தொகைக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு அளிக்கப்படுகிறது.விபத்து மரணம், நிரந்தர ஊனம், உடலில் ஒருபகுதி நிரந்தர ஊனம் ஆவது, விபத்தினால் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவது, இறப்பு நேர்ந்தால் இறுதிச் சடங்கு செலவு தொகை, குணமடையும் கால காப்பீடு, மகப்பேறு நன்மை தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.காப்பீடு திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, 155299, 033 22029000 என்கிற எண்களை தொடர்பு கொள்ளலாம்.