உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடைகள் இடித்து அகற்றம் ;கோவில் எதிரே பரபரப்பு

கடைகள் இடித்து அகற்றம் ;கோவில் எதிரே பரபரப்பு

திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் எதிரே பட்டி விநாயகர் கோவில் உள்ளது; கோவில் வளாகத்தில், தேங்காய், பழக்கடை கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்நிலையில், காலணி நிலையம் மற்றும் தர்ப்பணம் கொடுக்க கட்டிய இடங்களில், சிலர் கடை நடத்திவந்தனர்.இரண்டு கடைகள் இடம் மாறிய நிலையில், ஒரு கடை மட்டும் இயங்கி வந்தது; நேற்று முன்தினம் இரவு, பொக்லைன் மூலமாக, மூன்று கடைகள் இயங்கிய பகுதி மட்டும் இடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகளை கேட்டபோது, 'கோவில் கடைகள் வாடகை பாக்கி வைத்துள்ளன. கடையை இடமாற்றம் செய்ய ஒத்துழைக்காதது என, சிலருடன் கருத்துவேறுபாடு இருந்தது. அப்பகுதியில் தர்ப்பண மண்டபம் கட்ட உத்தேசிக்கப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளது. கடையை காலி செய்ய வேண்டுமென, கோவில் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது; தற்போது, சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு மாற்றுக்கடை ஒதுக்கப்பட்டுள்ளது,' என்றனர். ---திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் முன் கடைகளை இரவு நேரத்தில் மர்ம நபர்களால் இடிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை