உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாகர் பள்ளியில் விளையாட்டு விழா

சாகர் பள்ளியில் விளையாட்டு விழா

திருப்பூர் : பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளியில், 15வது விளையாட்டு விழா மற்றும் சாகர் ஸ்போர்ட்ஸ் அகாடமி துவக்க விழா நடைபெற்றது.சாகர் அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாளாளர் சவுந்திரராஜன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சீஜா வரவேற்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்; போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். குழு சாம்பியன்ஷிப்பை, சிகப்பு அணி பெற்றது.சாகர் அறக்கட்டளை துணை தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் பழனிசாமி, இணைச் செயலாளர் சாமிநாதன், கல்வி இயக்குனர் சுரேந்திர ரெட்டி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களின் துணை தலைவி ஸ்ரீமித்ரா நன்றிகூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை