உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டேபிள் டென்னிஸ் சென்சுரி பள்ளி அசத்தல்

டேபிள் டென்னிஸ் சென்சுரி பள்ளி அசத்தல்

திருப்பூர்;தெற்கு குறுமைய டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து போட்டியில் சென்சுரி பள்ளி மாணவர்கள் அசத்தினர்.திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான கூடைப்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி பிரன்ட்லைன் பள்ளியில் நடந்தது. இதில், சென்சுரி பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர். 14 வயது டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில், முதலிடம், 17 வயது ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.கூடைப்பந்து போட்டியில், 19 வயது பெண்கள் பிரிவில் சென்சுரி பள்ளி வென்று மாவட்ட அளவில் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆண்கள் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர். கால்பந்து போட்டியில், 17 வயது ஆண்கள் மற்றும் 17 வயது பெண்கள் பிரிவில் வென்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்று பெற்றனர்.டென்னிஸ் அகாடமியில் நடந்த, 17 வயது பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடம், 19 வயது பெண்கள் இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர். பள்ளிக்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு, ஆசிரியர்கள் கார்த்திக் பிரசாத், மாசாணம் ஆகியோரை பள்ளி தாளாளர் சக்திதேவி, பள்ளி முதல்வர் ஹெப்சிபா பால் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ