உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டின் கதவு உடைத்து ரூ.ஒரு லட்சம் திருட்டு

வீட்டின் கதவு உடைத்து ரூ.ஒரு லட்சம் திருட்டு

பொங்கலூர்;பொங்கலுார் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டு கதவை உடைத்து, ஒரு லட்சம் ரூபாயை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பொங்கலுார் அருகேயுள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கோலாயுதம், 58. ஓட்டல் நடத்துகிறார். நேற்று மாலை, 3:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்று விட்டார். மாலை, 5:30 மணிக்கு வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்து இருந்த ஒரு லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து அவர், அவிநாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். திருடிய நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை