உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

திருப்பூர்:திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1960 முதல், 2000ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.'நட்போடு உறவாடு' என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், கணவர், குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் தங்கள் குழந்தைகளை, சக தோழிகளுக்கும் அறிமுகம் செய்து வைத்ததுடன், அனுபவங்களை கூறி ஜாலியாக அளவளாவினர். ஒவ்வொரு 'பேட்ஜ்' மாணவிகளும், ஒன்றாக அமர்ந்து குரூப் போட்டோ, செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.தங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று பார்வையிட்டு, இருக்கையில் அமர்ந்து, 'இது என்னுடைய இடம்... நினைவில் இருக்கிறதா' என மாணவிகளாகவே மாறினர். முன்னாள் மாணவியர் சிலர், ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பூரிப்பில் துள்ளிக்குதித்து, ஆரவாரம் செய்தனர். முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, குடும்ப விழாவாக மாறியது. மாணவியர் அனைவரும் பள்ளி கலையரங்கில் ஒன்றாக அமர்ந்து 'குரூப் போட்டோ' எடுத்துக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக துணை மேயர் பாலசுப்ரமணியம் பங்கேற்றார். மர ஆர்வலர், மரம் அய்யப்பன் தலைமையில் மாணவியர் பள்ளிவளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினர். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பமேரி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ