உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

பல்லடம்;பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2004 முதல்- 2006ம் ஆண்டு வரை, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்த முன்னாள் மாணவ மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.முன்னாள் மாணவர்கள் தங்கள் படிப்பு, வேலை, குடும்பம் உள்ளிட்டவை குறித்து அனைவரிடமும் பகிர்ந்து கொண்டனர். ஆடல், பாடல், விளையாட்டு என, பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து, அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.தாங்கள் படித்த அரசு பள்ளி மற்றும் அரசு கல்லுாரிக்கு அலுவலக உபகரணங்களை வழங்கினர். ஆண்டுதோறும் இதேபோல் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். முன்னாள் ஆசிரியர்கள் தீபா, பூங்கொடி, ராமச்சந்திரன், லோகநாயகி, கந்தசாமி, பாலாமணி ஆகியோரும் பங்கேற்றனர்.நிகழ்ச்சியை ஒருங்கிணைந்த முன்னாள் மாணவர்கள், வசந்தி, கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில், ''பள்ளி படிப்பு முடிந்த பின், மாணவ, மாணவியர் சிலர் தவிர மற்றவர்கள் தொடர்பில் இல்லை. தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட காரணங்களால், பல்வேறு மாவட்டங்களில் உள்ளோம்.ஏற்கனவே தொடர்பில் இருந்த மாணவ - மாணவியர் மூலம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம். இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பல ஆண்டுக்கு பிறகு, மீண்டும் நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றனர்.---பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக்கொண்ட பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ, மாணவியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை