உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 10 நாளாக நிரம்பி வழியும் ஆண்டிபாளையம் குளம்

10 நாளாக நிரம்பி வழியும் ஆண்டிபாளையம் குளம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட எல்லையில் முதலில் அமைந்துள்ள நொய்யல் குளம், சாமளாபுரம் குளமாகும். அந்தக் குளம் நிரம்பி வழிந்தால், உபரிநீர் பள்ளபாளையம் குளத்துக்கு செல்கிறது.அடுத்ததாக செம்மாண்டம்பாளையம் குளம், ஆண்டிபாளையம் குளம், மூளிக்குளம், மாணிக்காபுரம் குளம், அணைப்பாளையம் குளம், கத்தாங்கண்ணி என, குளங்கள் வரிசையாக உள்ளன.ஆண்டிபாளையம் குளத்துக்கு, மங்கலம் நல்லம்மன் தடுப்பணை மற்றும் ஒட்டணையில் இருந்து, நொய்யல் தண்ணீர் கிடைக்கிறது. ஆண்டிபாளையம் குளத்துக்கு, இரண்டு வாய்க்காலில் தண்ணீர் வருவதால், வேகமாக நிரம்பியது. கடந்த, ஆடிப்பெருக்கு நாளில் குளம் நிரம்பியது.அன்று அதிகாலை, 3:00 மணி முதல் தொடர்ந்து 10வது நாளாக இன்றும் குளம், உபரிநீர் தொடர்ந்து வெளியேறுகிறது. குளத்தில் இருந்து வரும் மீன்களை பார்த்து, சிறுவர்கள் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருக்கின்றனர். குளத்தில், நீண்ட நாட்களாக தேங்கியிருந்த தண்ணீர் வெளியேறி, நொய்யலில் வரும் மழைநீரை தேக்கி வைக்க வேண்டும்.அதற்காகவே, தண்ணீர் வரத்து இருக்கும் அளவுக்கு, குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறி கொண்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ